Pages

திங்கள், 24 ஜனவரி, 2011

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்!!!

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

சனி, 8 ஜனவரி, 2011

சாராயம்!!!

சாராயம் மனித உடலின் ஏராளமான பாகங்களை பாதித்தாலும், அது பிரதானமாக பாதிப்பது ஈரலை.

ஈரல் பதிப்பு மூன்று கட்டங்களின் ஊடாக நடைபெறுகிறது.


ஆரம்பத்தில் கொழுப்புப் படித்தல் (fatty change) என்ற பாதிப்பும் பிறகு ஈரல் அழர்ச்சி (hepatitis)என்ற பாதிப்பும் இறுதியாக சிரோசிஸ் (cirrhosis)என்ற வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது


இங்கே முதல் இரண்டும் அதாவது கொழுப்புப் படித்தல் மற்றும் ஈரல் அழர்ச்சி என்பவை இருக்கும் நிலையில் ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால் அவரின் ஈரல் பழைய நிலையை அடைந்து சுகமாகலாம். ஆனால் அது சிரோசிஸ் என்ற நிலையை அடைந்தால் ஈரல் பழைய நிலைக்குத் திரும்புவது சாத்தியமற்றது.


சிரோசிஸ் இருப்பவருக்கு வாழ் நாள் என்னத்தொடங்கி விட்டது என்றே அர்த்தம் , ஆனாலும் அவர் எத்தனை காலங்கள் அந்த நோயிடுன் உயிர் வாழ்வது என்பது அவர் குடியை விட்டாரா என்பதிலேயே தங்கி உள்ளது.


அதாவது சிரோசிஸ் ஏற்பட்ட ஈரல் மேலும் பாதிக்கப்பட்டு முழுவதுமாக செயற்படாமல் போய் மரணம் ஏற்படுவதை பிற்போட மருந்துகளை விட , அந்த நபர் குடிப்பழக்கத்தை விடுவதே முக்கியமானது.




குடியால் பாதிக்கப்பட்ட ஒரு ஈரலும் பாதிக்கப்படாத ஒரு ஈரலும்



ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் , என்பதும் குடிக்கத்தொடங்கிய ஒருவர் அதற்கு அடிமை ஆகுவிடுவாரா அல்லது இடையில் குடியை விட்டு விடுவாரா என்பது அவரின் உடலில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று .
அல்ககோல் தீகைட்ரநேஸ் (alcohol dehyrdranase ) என்ற நொதியம்தான் சாராயாத்தை சமிபாடு அடையச் செய்து உடலில் இருந்து வெளியேற்றுவது, இந்த நொதியம் அதிகம் உள்ளவர்கள் அதிகம் குடிக்கும் போதே அவர்கள் எதிர்பார்க்கும் போதை அடைவார்கள் ,நொதியம் குறைவாக இருப்பவர்கள் குறைவாகத்தான் குடிக்க முடியும் .

மற்றும் தொடர்ச்சியாக குடிக்கும் ஒருவரில் இந்த நொதியம் பழக்கப் பட்டு போவதால் நாளுக்கு நாள் அவர் குடிக்கும் அளவும் அதிகரித்துக் கொண்டே போகும்.




சிரோசிஸ் ஏற்பட்ட ஒரு ஈரல்



அதைப் போல் ஒருவர் மதுவுக்கு அடிமை ஆவதும் , அதை இடையில் விட்டு விடுவதும் நம் மனத்துக்கு அப்பால் பரம்பரை(gene) அலகுகளாலும் தீர்மானிக்கப் படுகிறது.
கவனம் உங்கள் பரம்பரை (gene) அழகின் படி நீங்கள் குடிப் பழக்கத்துக்கு அடிமை ஆகும்தன்மை கொண்ட பரம்பரை அலகைக் கொண்டவர் எனில் உங்கலாளால் கடைசி வரைகுடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமலேயே போய் விடலாம்.

அதை
போல் சும்மா ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து பார் , எதையும் அனுபவித்துவைக்க வேண்டும் என்று யாரையும் குடிக்கத் தூண்டாதீர்கள். பிறகு உங்களால் கூடநிறுத்த முடியாத குடி காரர்கள் ஆகிப் போகலாம் அவர்கள்.

கருவுற்ற பெண்ணுக்கு...

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் (Maternal Serum Screening)

கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் (First Trimester Screening) சோதனையும், 15-21 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் (Triple Screening test) சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் (Carrier Screening) சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.