top ads

வியாழன், 5 பிப்ரவரி, 2015

வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவும் உணவுப் பொருட்கள்!!!

                            சுவாசத்தில் துர்நாற்றம் வீசுகிறதா? அதனால் நிறையவே கவலையாக இருக்கிறதா?  கவலையை விடுங்கள். நமது அன்றாட  உணவு பழக்க வழக்கங்களின் மூலமாகவே இதனை எளிதில் சரி   செய்து விடலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்று தான். காலையில் பல் துலக்கிய உடன்  உங்களுக்கு கூற இருக்கும் உணவுகளை தவறாது   உட்கொண்டாலே போதுமானது   முடிந்த    அளவு    இரவில்     இறைச்சி    மற்றும்  கடினமான உணவுகளை     உட்கொள்வதை  குறைத்து   கொள்ளுங்கள். மற்றும்     இரவு உணவில் நிறைய  இனிப்பு,  நொறுக்கு  தீனி  போன்ற  உணவு  பொருட்களை சேர்த்துக் கொள்வதை இயன்ற அளவு தவிர்த்திடுங்கள். வாருங்கள் இப்போது சுவாச  துர்நாற்ற பிரச்சனைக்கு  தீர்வளிக்கும்  உணவுகளை பற்றி   தெரிந்துக் கொள்ளலாம்..
வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபட உதவும் உணவுப் பொருட்கள்!!!
நீர் 
              முடிந்த அளவு நிறைய தண்ணீர் பருகுவது வாய் துர்நாற்றத்திற்கு சிறந்த தீர்வளிக்கும். அதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் பருகுவது அவசியம் ஆகும்.
ஆரஞ்சு 
               ஆரஞ்சு பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. மற்றும் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சுவாசிப்பதில் இருக்கும் சிரமத்தில் இருந்து விடுபட உதவுகிறது.
மசாலா பொருட்கள் 
              ஏலக்காய், பெருஞ்சீரகம், புதினா, கொத்தமல்லி, ரோஸ்மேரி போன்றவை சுவாச புத்துணர்ச்சி பெற பெருமளவில் உதவுகிறது.

கொத்தமல்லி 
                   கொத்தமல்லி பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை போக்கிட உதவுகிறது. இதனால் சுவாச புத்துணர்ச்சி எளிதில் பெற இயலும்.

கோதுமை 
                        கோதுமை உணவுகளில் இருக்கும் கீட்டோனின் நற்குணம் வாய் துர்நாற்றத்தைப் போக்கி சுவாசப் புத்துணர்ச்சிப் பெற பயன் தருகிறது.

கிரீன் டீ!
       கிரீன் டீயில் இருக்கும் உயர்ரக ஃப்ளேவோனாய்டுகளின் பயன் பற்களின் இடுக்கில் தங்கும் பாக்டீரியாக்களை கொல்கிறது. அதனால் வாய் துர்நாற்றம் அடையாது இருக்க கிரீன் டீ உதவுகிறது.


நார்ச்சத்து
                  நார்ச்சத்து உள்ள உணவுகளில் வாய் துர்நாற்றத்தைப் போக்கும் பண்பு     அதிகம் உள்ளதால். இதை        உட்கொள்வதின்     மூலம் சுவாசப் புத்துணர்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளது.






You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About