த லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, ஓராண்டில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் உயிரிழப்புகளுக்கு குறைமாத பிறப்புகளே காரணமாகியுள்ளன.
குறைமாதத்தில் பிறந்த பின்னர் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளினால் இறக்கும் குழந்தகள் எண்ணிக்கை அடிப்படையில் அதிக உயிரிழப்பை சந்திக்கும் நாடு இந்தியாதான் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்தியாவில் ஒரு ஆண்டில் சுமார் 3.61,000 குழந்தைகள் குறைமாதப் பிரசவத்தின் பின்னர் ஏற்படும் உடல் நலப் பாதிப்பால் உயிரிழக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்திலும் இவ்வாறாக அதிகளவான உயிரிழப்புகள் நடக்கின்றன. இபோலா நோய் பரவல் காரணமாக இந்த அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.
மிகவும் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல், மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சரியாக வளர்ச்சியடைந்திருக்காத காரணத்தினால் உயிரிழப்புக்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது.
ஒருகாலத்தில் நிமோனியா போன்ற கிருமித் தொற்றுநோய்களால் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகால உயிரிழப்புகளிலும் பார்க்க, இப்போது முதற்தடவையாக, குழந்தை பிறந்தவுடன் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கூடுதலான உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக பிபிசி மருத்துவத்துறை செய்தியாளர் கூறுகின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக