எச் ஐ வி வைரஸ் வரவர தீவிரம் குறைந்து வருவதாக முக்கிய விஞ்ஞான ஆய்வு ஒன்று கூறுகிறது.
பொட்ஸ்வானாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஆராய்ந்தபோது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை கண்டறிந்துள்ளார்கள்.
எச் ஐ வி வைரஸானது தான் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் உயிரியல் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் காரணமாக அதனால், முழுமையான எயிட்ஸ் நோயை ஏற்படுத்த நீண்ட நாட்கள் பிடிக்கிறது என்று அந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த முடிவுகள் ஓரளவு ஊக்கத்தை தந்தாலும், இன்னமும் இந்த வைரஸ் ஒரு குணப்படுத்த முடியாத சவாலாகவே தொடர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக