top ads

வியாழன், 11 டிசம்பர், 2014

இடைவெளி நேரத்தில் என்ன சாப்பிடலாம்...

நாம் அனைவரும் காலை உணவை சாப்பிடுகிறோமோ இல்லையோ... முற்பகல் 11 மணியளவில் நிச்சயம் எதையாவது சாப்பிடத் தேடுகிறோம். வீட்டில் இருப்பவர்கள் கையில் கிடைத்ததை சாப்பிடுவார்கள். ஒரு தேநீர் குடிப்பார்கள்.
அலுவலகத்தில் இருப்பவர்கள் நிச்சயம் தேநீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இது நிச்சயம் செய்யவே கூடாத விஷயமாகும். 11 மணியளவில் காபி, டீ சாப்பிடுவதால், மதிய செரிமாணம் பாதிக்கப்படும்.
அதற்கு பதிலாக 11 மணியளவில், மோர் அல்லது இளநீர் சாப்பிடலாம். காய்கள் கலந்து சூப் அல்லது பழச் சாறு இதில் ஏதாவது ஒன்று குடிக்கலாம்.
காய்கறி துண்டுகள், பழத் துண்டுகள் போன்றவற்றையும் சாப்பிடலாம். இது வயிற்றுக்கும், ஆரோக்கியத்துக்கும் பேருதவியாக இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About