30 வயதில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு லோ போன் டென்சிட்டி பிரச்னை வரும். அது நீங்களா?’, ‘கால்சியம் போதவில்லை எனில் இடித்துக் கொண்டாலே, எலும்பு உடைந்துவிடும்’ இப்படி பெண்களை அச்சுறுத்தும் விளம்பரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இது உண்மையா?
எலும்பும் ஒரு திசுதான். புதிய எலும்பு செல் உருவாவதும், வயதான செல் மறைவதும், உடலில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். பொதுவாக, வயது அதிகரிக்கும்போது, எலும்புகளின் அடர்த்தி குறையும். அதிக அளவில் குறையும்போது, எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன.
கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையும்போதும், எலும்பின் அடர்த்தி குறைகிறது. இதனால், எலும்பு பலவீனமடையத் தொடங்கும். பிறந்த குழந்தைகளுக்கு எலும்பு மிகவும் மிருதுவாக இருக்கும். குழந்தை வளர வளர, எலும்புகள் உறுதியடையும். எலும்புகள் வலு குறைந்துபோனால், லேசாகத் தவறி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். இளம் வயதில் எலும்பு ஆரோக்கியத்துடன் இருந்தால், அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படாது.

மனித எலும்புகள் பற்றி அறிவோம்
பதிலளிநீக்குஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D)