ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் பயனற்றுப் போகும் நிலையை சமாளிக்க பெரும்பாலான நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது மலேரியா, காச நோய் போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்று அந்த நிறுவனம் வர்ணித்திருக்கிறது.
இது குறித்து 133 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 34 நாடுகள் மட்டுமே இந்த மருந்துகள் சக்தியிழந்து போவதைத் தடுக்கும் முயற்சியை செய்யும் நிலையில் உள்ளன என்று காட்டுவதாக தெரியவந்திருக்கிறது.
ஆண்டிபயாடிக் மருந்துகளால் நோய்களை குணப்படுத்த முடியாமல் போகும் நிலையை எதிர்த்து நடவடிக்கைகள் எடுக்க உலகளாவிய வகையில் எடுக்கப்படவுள்ள ஒரு திட்டம் அடுத்த மாதம் ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்
tks
bbc.com