top ads

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை

எடை!

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகள் எடை 12 கிலோ வரை கூடலாம். இதில் கரு, பனிக்குடம், அதில் உள்ள திரவம் ஆகியவற்றின் எடை 4.4 கிலோ, கருப்பையும், மார்பகமும்1.1 கிலோ, ரத்த அதிகரிப்பு 1 கிலோ, கொழுப்பு சேர்வது 2 கிலோ, நீர் தேங்குவது 4 கிலோவும் ஆகும்.

உணவு முறை!

புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி சத்து அதிகம் உள்ளது. ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட புழுங்கல் அரிசியில் இருந்து இச்சத்து பிரிக்கப்படுவதால் சத்து கிடைக்காது. வைட்டமின் பி சத்து நீரில் கரையும் தன்மை உள்ளது. வேகவைத்து கஞ்சியை வடித்துவிடும் போது அதில் சென்று அச்சத்து வீணாகிறது. அதனால் கஞ்சித் தண்ணீர் குடிப்பது நல்லது.

விலங்கு உணவுகளில் இருந்து மட்டுமே வைட்டமின் பி12 சத்து கிடைக்கிறது. ரத்த அணுக்கள் உண்டாக வைட்டமின் பி12 தேவை. ரத்த சோகை உண்டாவதற்கு இதன் பற்றாக்குறையும் ஒரு காரணம். மீன், முட்டை, பால் இறைச்சி ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிட்டு இச்சத்தைப் பெறலாம்.

தினமும் குறைந்த கொகுப்புள்ள பால் 750 மில்லி கிராம் அருந்தினால், அன்றையத் தேவையில் சுமார் 80 விழுக்காடு கால்சியத்தைப் பூர்த்தி செய்யும். பால் சாப்பிடாதவர்கள், சிறிய வகை மீன்கள், பச்சைக் காய்கறிகள், சோயா, ஆரஞ்சு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

கருச்சிதைவு?

ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை ஆறு முதல் பத்து வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக, 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்குப் பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். முப்பத்தைந்து வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பத்தின் போது ஏற்படும் எந்த ரத்தப் போக்கும் கருச்சிதைவின் தொடக்கமாக இருக்கக்கூடும். ரத்தப் போக்கு ஏற்பட்டு அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்தமுறை நலமான மகப்பேறு அடையும் வாய்ப்பு 80 விழுக்காடு இருக்கும். இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் 75 விழுக்காடும், மூன்று முறை ஏற்பட்டிருந்தால் 70 விழுக்காடு வாய்ப்பும் இருக்கும்.

உடற்பயிற்சி!

உடற்பயிற்சி செய்ய விரும்பும் கர்ப்பிணிகள், ·பிசியோதெரபி நிபுணரின் ஆலோசனை மற்றும் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. பயிற்சியின் போது கணவர் உடன் இருந்தால் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்யலாம்.

பிரசவ காலம்!

பிரசவ நேரத்தின் போது எதையும் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுவர். இதனால் பிரசவ நேரத்தில் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம். தவிர, இத்தகைய நிலைகளில் மயக்க மருந்து மருத்துவரின் உதவி தேவைப்படுவதால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About