top ads

வியாழன், 23 டிசம்பர், 2010

பிசிஓடி உள்ள பெண் களுக்குக்காக{pcod}

உடல் எடையால் பாதிப்பு .
(நான் படித்த மற்றும் பார்த்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்தூ கொள்கிறேன்) . மகப்பேறு இன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான சினைப் பை பிரச்சனையை உடல் எடை குறைத்தல் மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் மூலம் எளிதில் குணமாக்கலாம் என்று கூறுகிறார் குடும்ப நல மருத்துவர் அன்பு கௌதம். பெண்களை பாதிக்கும் முக்கிய கோளாறுகளில் ஒன்று சினைப்பை கட்டி. . இந்த நோய்லிருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது உடல் எடையை குறைப்பது. அதிகமாக உடல் எடை கூடுதல், 3 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுதல், கரு உண்டாகாமல் இருந்தால் உடனடியாக பெண் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்கிறார் பெண்கள் நல மருத்துவர் திருமதி. அன்பு கௌதம் எம்.டி. (ஓ.ஜி).
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் லைப் லைன் கிளினிக்கின் மருத்துவர் மருத்துவச் சுடருக்கு அளித்த விளக்கங்கள் வருமாறு:

இன்றைய சூழலில் பாலி சிஸ்டிக் ஓவேரியன் கோளாறால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பிசிஓடி என்று சொல்லப்படுகின்ற சினைப்பை மற்றும் சினைமுட்டை கோளாறு ஏற்படுகிறது. குறிப்பாக இக்கோளாறு உடைய பெண்கள் 15 முதல் 25 வயது வரை அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்கு அவர்களின் சினைப்பையை சுற்றி சிறிது சிறிதாக நீர்க்கொப்பளங்கள் மூடி இருக்கும். இது இரண்டு சினைப்பை களையும் பாதிக்கும். இதன் விளைவாக இந்த கோளாறு உடைய பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், கருவுறாமை, உடல் எடை கூடுதல், உடலில் தேவையற்ற இடங்களில் அதிக ரோமங்கள் முளைத்தல் (குறிப்பாக முகத்தில்) ஆகியவை ஏற்படும். பிசிஓடியால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் பொதுவாக ஹார்மோன் கள் குறைவ தாலோ அல்லது அதிகமா வதாலோ ஏற்படக் கூடும். குறிப்பாக இந்த பெண் களுக்கு ஒவ்வொரு மாத மும் மாதவிடாய் சரியாக ஏற்படாது. சிலருக்கு 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையும், சிலருக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை யும் ஏற்படும். இதனால் உடல் எடை கூடும். இப்படி உள்ள பெண்களுக்கு எப்.எஸ்.எச், எல்.எச், புரோலாக்டின் என்ற ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலையே முக்கிய காரணமாகும். இப்படிப்பட்ட பெண் களுக்கு இரத்த பரி சோதனை மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலமாகவும் பரிசோதனைகள் செய்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டும். கருவுறாமை கருவுறாமைக்கு பிசிஓடி ஒரு முக்கிய காரணமாகும்.
பொதுவாக பெண் களுக்கு மாதவிடாய் ஆரம்பித்த திலிருந்து 14வது நாள் (ஓவலேஷன்) சினைப்பையிலிருந்து ஒரு தகுதி வாய்ந்த சினை முட்டை பெரிதாகி உடைந்து ஒரு முட்டை வெளிவரும். ஆனால் பிசிஓடி உள்ள பெண் களுக்கு இந்த நிகழ்வு நடைபெறு வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் சினைப்பை சுவர் தடித்தும், சிறிய பல நீர்க்கட்டிகள் சினை முட்டையை சூழ்ந்தும் இருப்ப தால், ஓவலேஷன் தடுக்கப்படுகிறது. இதனால் கருவடையும் வாய்ப்பு குறைகிறது. இந்த பாதிப்பு உள்ள பெண்கள் பெண்நலமருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனைகள் மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் (லேப்ராஸ் கோபிக் ஓவேரியன் டிரில்லிங்) மூலம் தீர்வு காணலாம். உடல் எடை கூடுதல்: பிசிஓடி, ஹார்மோன்களின் சமச்சீரற்ற நிலை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி யின்மை, மனசோர்வு மற்றும் இன்சுலின் சுரப்பு குறைவாக இருத்தல் ஆகியவற்றால் உடல் எடை கூடுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் மூலம் மேற்கண்ட நிலை யிலிருந்து நலம் பெறலாம் என்று கூறுகிறார் பெண்கள் நல மருத்துவர் அன்பு கௌதம். தொடர்புக்கு: லைப் லைன் கிளினிக், 37, சாஸ்திரி நகர், முதல் அவென்யூ, அடையாறு, சென்னை 20. போன்: 044-24917471, 24469455, 9840940278.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About